ADDED : ஏப் 16, 2026 10:53 PM

அ நிறம் | அளவு
புவனகிரி: சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, புவனகிரி பஸ் நிலையத்தில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் வரும், 23 ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக, புவனகிரி பேரூராட்சி சார்பில், பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
புவனகிரி பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன் வரவேற்றார். செயல் அலுவலர் அண்ணாதுரை கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். முன்னதாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
