ADDED : ஏப் 07, 2026 09:52 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வாக்காளர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விருத்தாசலம் உழவர் சந்தையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டம் சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பை, வாக்காளர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, திட்ட இயக்குனர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
