ADDED : ஏப் 18, 2026 04:10 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சுந்தரராஜன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். பேரணி முக்கி ய வீதிகள் வழியாக முதுநகர் வரை நடந்தது.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், பெரியசாமி, பிரான்சிஸ், ஓட்டுநர் பயிற்சி பள்ளி பணியாளர்கள், பயிற்றுநர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
