தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இயந்திரம் கோளாறால் ஓட்டுப்பதிவு நீட்டிப்பு

 இயந்திரம் கோளாறால் ஓட்டுப்பதிவு நீட்டிப்பு

 இயந்திரம் கோளாறால் ஓட்டுப்பதிவு நீட்டிப்பு


ADDED : ஏப் 23, 2026 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருவள்ளுவர் நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில் பண்ருட்டி தொகுதியின் 95 ம் எண் பூத் அமைந்திருந்தது. அங்கு நேற்று மாலை 4:00 மணிக்கு இ.வி.எம்.இயந்திரம் பழுதானதால் ஓட்டு பதிவு தடைபட்டது.

அந்த இயந்திரத்தை சரி செய்ய முடியாததால் வேறு இயந்திரம் எடுத்து வந்து மாலை 5:00 மணிக்கு மீண்டும் ஓட்டு பதிவு துவங்கியது.

இந்த தாமதத்தால் ஓட்டு பதிவு நேரம் முடியும் நேரமான மாலை 6:00 மணிக்கு வரிசையில் காத்திருந்த 85 பேருக்கு டோக்கன் கொடுத்தனர். ஆனால் 6:00 மணிக்கு மீண்டும் இயந்திரம் பழுதானது. அதை சரி செய்து 7:00 மணிக்கே ஓட்டு பதிவு துவங்கியது.

இதனால் ஓட்டு போட்டு முடிக்க இரவு 8:00 மணியானது.அதன் பிறகே இயந்திரத்துக்கு சீல் வைத்தனர்.இதனால் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us