ADDED : ஜூன் 13, 2026 05:15 AM

குள்ளஞ்சாவடி: கடலுார் வி.பி.ஜி.ஆர்., இல்ல திருமண வரவேற்பு விழா நாளை நடைபெறுகிறது.
கடலுார் தொழிலதிபரும், வி.பி.ஜி.ஆர்., நிறுவன சேர்மனும், மாவட்ட குவாரி சங்க செயலாளருமான கோவிந்தராஜ் இல்ல திருமண வரவேற்பு விழா, நாளை கடலூரில் நடைபெறுகிறது.
முன்னதாக மணமகன் வி.பி.ஜி. சதீஷ்குமார் மற்றும், மணமகள் கிருத்திகா ஆகியோருக்கு கடந்த, 4ம் தேதி, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் திருமணம் நடந்தது.
கடலூர், பாரதி ரோடு, சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் மாலை, 6:30 மணிக்கு மேல் வரவேற்பு நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துமாறு வி.பி.ஜி.ஆர்., நிறுவன சேர்மன் கோவிந்தராஜ், அமுதவள்ளி கோவிந்தராஜ், என்.எல்.சி ஒப்பந்ததாரரும், வி.பி.ஜி.ஆர் ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவன உரிமையாளருமான வி.பி.ஜி ரவிசங்கர், சங்கீதா ரவிசங்கர் அழைப்பு விடுத்துள்ளனர்.
