/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் - சாத்துக்கூடல் சாலை துண்டிப்பு
/
விருத்தாசலம் - சாத்துக்கூடல் சாலை துண்டிப்பு
ADDED : டிச 15, 2024 08:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கஸ்பா ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி வருவதால், விருத்தாசலம் - சாத்துக்கூடல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம் மேட்டுக்காலனி - சாத்துக்கூடல் சாலையில் லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த சாலையில் குறுக்கே உள்ள கஸ்பா ஏரி மதகு வழியாக அதிகளவில் உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால், இந்த சாலையில் கடந்த மூன்று நாட்களுக்கு மேல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.