தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விருத்தாசலம் மணிமுக்தாறு படித்துறை சீரமைப்பு பணி

விருத்தாசலம் மணிமுக்தாறு படித்துறை சீரமைப்பு பணி

விருத்தாசலம் மணிமுக்தாறு படித்துறை சீரமைப்பு பணி


ADDED : மார் 11, 2024 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 05:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலம் மணிமுக்தாற்றில் 1 கோடியே 46 லட்சம் செலவில், படித்துறை சீரமைக்கும் பணி துவங்கியது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவத்தன்று, மணிமுக்தாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது ஐதீகம். இந்நாளில் லட்சக்கணக்கானோர் மணிமுக்தாற்றில் கூடுவர். இந்நிலையில், மணிமுக்தாறு படித்துறை பெயர்ந்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது.

அதையடுத்து, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மணிமுக்தாறு படித்துறையை சீரமைக்க விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன கோரிக்கை வைத்தார். அதன்பேரில், மாநில நிதியின் கீழ் 1 கோடியே 46 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்று பூமி பூஜை நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பூமி பூஜையில் பங்கேற்று துவக்கி வைத்தார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர் சந்த் பலங்கேற்றார்.

பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் எத்திராஜூலு, உதவி பொறியாளர்கள் உமா, சுதர்சன், வெங்கடேசன், பாஸ்கரன், செந்தில்நாதன், காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார், கவுன்சிலர்கள் சிங்காரவேல், கருணா, பாலாஜி சிவாச்சாரியார் உடனிருந்தனர். அதில், 80 மீட்டர் அகலத்திற்கு படித்துறையை பலப்படுத்தி ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us