ADDED : ஜூன் 21, 2026 12:59 AM

பண்ருட்டி: பண்ருட்டி கும்பகோணம் சாலையில், காடாம்புலியூரில், ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் அதி நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்ட வி.வி.எச்., ஏ.சி., திருமண மஹால் திறப்பு விழா நடந்தது.
திருமண மஹால் உரிமையாளர்கள் அமெரிக்கா வாழ் தமிழ் தொழிலதிபர்கள் தமிழழகன், சவுத்ரி அனைவரையும் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மஹாலை திறந்து வைத்தார்.
விழாவில் த.வா.க., நிறுவன தலைவர் வேல்முருகன், திருமாள்வளவன், வடக்குத்து ஜெகன், பண்ருட்டி சேர்மன் ராஜேந்திரன், த.வா.க., பிரமுகர் அரங்கநாதன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரிமா, ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறவினர்கள்,நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவையொட்டி ஹரிணி சௌத்ரி பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது.
