/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., அடிக்கல்
/
காத்திருப்போர் கூடம் எம்.எல்.ஏ., அடிக்கல்
ADDED : செப் 20, 2025 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : கிள்ளை அடுத்த நஞ்சைமகத்து வாழ்க்கை ஊராட்சிக்குட்பட்ட பனங்காடு கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சம் மதிப்பில் காத்திருப்போர் கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் தெய்வீகன், ஒன்றிய அவைத் தலைவர் சேட்டு பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
பாண்டியன் எம்.எல்.ஏ., காத்திருப்போர் கூடத்திற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் அன்பழகன், புருஷோத்தமன், பரமானந்தம், சுப்ரமணியன், மோகன்குமார், மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.