ADDED : மார் 14, 2026 05:26 AM

கடலுார்: கடலுார் கேப்பர்மலையிலுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு குரூப் 1, 2 நிலை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள், ஊதிய உயர்வு வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரியத்தில் பணியாற்றும் குரூப் 1, 2 நிலை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான முன்மொழிவில், 'ஊதிய உயர்வு இல்லை' என்ற பரிந்துரையை திரும்ப பெறக்கோரி நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து குரூப் 1, 2 பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக்கோரி கடலுார் கேப்பர்மலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் நுழைவாயில் முன் மின்சார வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாலை 4 மணிக்கு துவங்கிய காத்திருப்பு போராட்டம் இரவு 8.30 மணி வரை நீடித்தது.
