தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காத்திருப்பு போராட்டம் 

 காத்திருப்பு போராட்டம் 

 காத்திருப்பு போராட்டம் 


ADDED : மார் 14, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திட்டக்குடி: இந்திய கம்யூ., சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, காத்திருப்பு போராட்டம் நடந்தது.

தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, ஒன்றிய துணை செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகக்குழு முருகையன் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், ராமநத்தம், காந்திநகரில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் நரிக்குறவர் உள்ளிட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

தகவலறிந்து வந்த, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் சமாதானம் பேசி, ஒரு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதையேற்று பகல் 11:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us