ADDED : ஏப் 11, 2026 05:10 AM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் நடந்தன.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது.
தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வணங்கினால் கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து காலபைரவருக்கு சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். கைலாசநாதர், பூலோகநாதர் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தன.
