/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜூஸ் வேணுமா; கேஸ் வேணுமா? போலீசார் 'ஹெல்மெட்' பிரசாரம்
/
ஜூஸ் வேணுமா; கேஸ் வேணுமா? போலீசார் 'ஹெல்மெட்' பிரசாரம்
ஜூஸ் வேணுமா; கேஸ் வேணுமா? போலீசார் 'ஹெல்மெட்' பிரசாரம்
ஜூஸ் வேணுமா; கேஸ் வேணுமா? போலீசார் 'ஹெல்மெட்' பிரசாரம்
ADDED : ஏப் 20, 2025 03:07 AM

கடலுார்: கடலுாரில், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, ஹெல்மெட் அணிந்து பயணம் செய்தவர்களுக்கு ஜூஸ், மோர் வழங்கி போக்குவரத்து போலீசார் உற்சாகப்படுத்தினர்.
போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும், ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், கடலுார் மாவட்டம் முழுதும் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
நேற்று, கடலுார் டவுன்ஹால் அருகே, போக்குவரத்துப் பிரிவு இன்ஸ்பெக்டர் அமர்நாத், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார், ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு, ஜூஸ், மோர் வழங்கி உற்சாகப்படுத்தினர்.
ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம், விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி, அபராதம் விதித்தனர்.