/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுகாதார நிலையம் திறக்க வார்டு மக்கள் கோரிக்கை
/
சுகாதார நிலையம் திறக்க வார்டு மக்கள் கோரிக்கை
ADDED : ஜன 22, 2025 09:42 AM

பெண்ணாடம் : திருமலை அகரம் துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வார்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் பேரூராட்சி, திருமலை அகரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு, சுற்றியுள்ள நந்திமங்கலம், வடகரை, கோனுார், பெ.கொல்லத்தங்குறிச்சி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
நாளடைவில் பராமரிப்பின்றி சுகாதார நிலையம் பூட்டப்பட்டதால் இப்பகுதி மக்கள் இங்கிருந்து, 8 கி.மீ., துாரமுள்ள பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையம், 15 கி.மீ., துாரமுள்ள திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெண்கள், முதியோர், கர்ப்பிணிகர் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
வார்டு மக்கள் சுகாதார நிலையத்தை திறக்க கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, வார்டு மக்கள் நலன்கருதி, திருமலை அகரத்தில் காட்சிப்பொருளான சுகாதார நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.