ADDED : ஆக 16, 2026 08:12 PM

திட்டக்குடி, ஆக. 17–
தொளாரில் பயன்பாடின்றி பாழாகும் முருங்கை நாற்றங்கால் நிழல்வலையை சீரமைத்து, நாற்று உற்பத்தியை துவக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லுார் ஒன்றியம், திட்டக்குடி அடுத்த தொளார் ஊராட்சியில் 5 ஆண்டுகளுக்கு முன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் முருங்கை நாற்றங்கால் பண்ணை அமைக்க 3 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிழல்வலை அமைக்கப்பட்டது.
ஓரிரு மாதங்கள் மட்டுமே நாற்றங்கால் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் முறையாக பராமரிக்காததால் நாளடைவில் நாற்று உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் நாற்றங்கால் நிழல்வலை பராமரிப்பின்றி பாழாகி வருகிறது.
எனவே, ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு, முருங்கை நாற்றங்கால் அமைக்கும் பணியை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
