/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் கன மழையால் நீர்நிலைகள்... நிரம்புகிறது; பேரிடர் மீட்புக்குழு கடலுார் மாவட்டம் வருகை
/
மாவட்டத்தில் கன மழையால் நீர்நிலைகள்... நிரம்புகிறது; பேரிடர் மீட்புக்குழு கடலுார் மாவட்டம் வருகை
மாவட்டத்தில் கன மழையால் நீர்நிலைகள்... நிரம்புகிறது; பேரிடர் மீட்புக்குழு கடலுார் மாவட்டம் வருகை
மாவட்டத்தில் கன மழையால் நீர்நிலைகள்... நிரம்புகிறது; பேரிடர் மீட்புக்குழு கடலுார் மாவட்டம் வருகை
ADDED : நவ 27, 2024 07:43 AM

கடலுார்: மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும். அதில் நவம்பர் மாதத்தில் தான் கனமழை கொட்டும். இந்த ஆண்டு அக்டோபர் 2வது வாரத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.
கடலுார் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு, 1,200 மி.மீட்டர் ஆகும். அதில் வடகிழக்கு காற்றின் மூலம் நமக்கு 790 மி.மீட்டரும், அக்டோபரில் 220 மி.மீ., மழையும் பெய்ய வேண்டும். ஆனால், இந்த அக்டோபரில் 213.36 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது.
நவம்பர் மாதத்தில் 295 மி.மீ., மழைக்கு 50 சதவீதம் கூட பெய்யவில்லை. இந்நிலையில் தற்போது, தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தீவிரமடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலுார் மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன் எதிரொலியாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கச்சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு செல்லவும், ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை முதல் மாவட்டத்தில் இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பள்ளிகளுக்கு விடுமுறை
நேற்று முன்தினம் அதிகளவு மழையில்லாததால் நேற்று பள்ளி, கல்லுாரிகள் வழக்கம்போல் இயங்கின. ஆனால் தொடர் மழையின் காரணமாக ஒரு சில பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி விடும் நேரத்திற்கு முன்பே விடப்பட்டன. அதனைத்தொடர்ந்து கடலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மீட்பு குழு விரைவு
மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமாயின், அவர்களை காப்பாற்றுவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ அரசு, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரை கடலுாருக்கு அனுப்பியுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து, ரப்பர் படகுகள் உ ள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் அவர்கள் கடலுார் விரைந்துள்ளனர்.