ADDED : நவ 28, 2025 06:32 AM
காட்டுமன்னார்கோவில்: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அணைக்கரை கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
வடகிழக்கு பருவமழை டெல்டா பகுதியில் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித் துள்ளது. கனமழை எதிரொலியாக அணைக்கரை கீழணையில் இருந்து கொ ள்ளி டம் ஆற்றில் 1,500 கன அடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. கல்லணையில் இருந்து கீழணைக்கு 3,250 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. கீழணையில் இருந்து வடவாற்றில் 1,505 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்காலில் 210 கன அடி, தெற்கு ராஜன் வாய்க்கால் 217 கன அடி, கும்கி மன்னியாற்றில் 73 கன அடி மற்றும் மற்ற சிறு பாசன வாய்க்கால் 15 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

