/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெருமாள் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர்: விவசாயிகள் முதல்வரிடம் மனு

ADDED : ஜூலை 17, 2025 06:52 AM
சேத்தியாத்தோப்பு: பெருமாள் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென, வெள்ளாறு அணைக்கட்டு மானம்பார்த்தான் வாய்க்கால் பாசன சங்க தலைவர் ராமச்சந்திரன் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து சிதம்பரம் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினிடம், அவர் அளித்த மனு:
பூவாலை மணிக்கொல்லை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விவசாயம் சார்ந்த நிலபரப்பு கிராமங்கள் டெல்டா கடைமடை பாசனப்பகுதியாக உள்ளன. மழை, வெள்ளக்காலங்களில் குறிஞ்சிப்பாடி தாலுாவில் உள்ள பெருமாள் ஏரி உபரி நீரை ஆணைப்பேட்டை வடிகால் வாய்க்கால் மூலமாக கடலுக்கு வீணாக செல்கிறது.
எனவே, பெருமாள் ஏரியின் மேடான பகுதியில் உள்ள குண்டியமல்லுாரில் இருந்து பரவனாற்றை கடந்து பூவாலை மேற்கு, பூவாலை கிழக்கு, அலமேலுமங்காபுரம், சிறுபாலையூர் தெற்கு, மணிக்கொல்லை, பால்வாத்துண்ணான், சிலம்பிமங்கலம் மற்றும் பெரியப்பட்டு வரை 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும் வகையில், பெருமாள் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.