/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர்
/
குடிநீர் குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீர்
ADDED : பிப் 05, 2025 10:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுாரில் மாநகராட்சி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் புதுப்பாளையம் லோகம்மாள் கோவில் தெருவில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு, மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்தெருவில் குடிநீர் பைப் லைன் உடைந்து கடந்த சில மாதங்களாக தண்ணீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.