தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாலத்தின் கீழ் தேங்கிய தண்ணீர் வாகன ஓட்டிகள் அவதி  

 பாலத்தின் கீழ் தேங்கிய தண்ணீர் வாகன ஓட்டிகள் அவதி  

 பாலத்தின் கீழ் தேங்கிய தண்ணீர் வாகன ஓட்டிகள் அவதி  


ADDED : மார் 25, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே உயர்மட்ட பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் பைபாஸ் சாலையில், பின்னலுார் வாலாஜா ஏரி அருகே, வாய்க்கால் மற்றும் வாகனங்கள் குறுக்கே சென்று சர்வீஸ் சாலையில் செல்வதற்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் கீழ் கும்பகோணத்திலிருந்து சேத்தியாத்தோப்பு வழியாக வரும் பஸ்கள், கனரக லாரிகள், பைக்குகள், கார்கள் பாலத்தின் கீழ் சென்று சர்வீஸ் சாலையில் ஏறி வடலுார் சாலையில் சென்று வருகின்றன.

தற்போது வாலாஜா ஏரியிலிருந்து நவரை பட்ட சாகுபடிக்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் உயர்மட்ட பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது

வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் வயல்களுக்கு செல்லாமல் சர்வீஸ் சாலை, உயர்மட்ட பாலத்தின் கீழ் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us