தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு

 பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு

 பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு


ADDED : டிச 21, 2025 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2025 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 400 கன அடியாக குறைக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 133.90 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி. நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பதிவாகவில்லை. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 103 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 5609 மில்லியன் கன அடியாகும்.

தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த 1600 கன அடிநீர் நேற்று காலையில் இருந்து வினாடிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்டது. தேனி அருகே முல்லைப் பெரியாற்றில் 10 நாட்களுக்கு முன் தவறி விழுந்த சிறுவன் உடலை மீட்கும் பணிக்காக நீர் திறப்பு குறைக்கப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 144 மெகாவாட்டில் இருந்து ஒரு ஜெனரேட்டர் மூலம் 36 மெகாவாட்டாக குறைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us