/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
/
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ADDED : ஜன 19, 2025 06:27 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர், ராஜன் வாய்க்காலில் பாசனத்திற்கு திறக்கப்பட்டது.
டிசம்பர் மாதம் பெய்த கனமழையின்போது, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு வெள்ளாறு, மணிமுக்தாறு வழியாக அதிக அளவில் தண்ணீர் வந்தது. கூடுதலாக தண்ணீர் வந்ததால் பாதுகாப்பு கருதி, 55 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆற்றில் படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் டிசம்பர் மாத இறுதியில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் ஷட்டர்கள் அனைத்தும் அடைத்து பொதுப்பணி துறையினர் தண்ணீரை தேக்கியுள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாததால் பாசனம் பெறும் பகுதிகளான பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், கிள்ளை ஆகிய பகுதிகளில் நெற்பயிர்கள் பால்கட்டும் பருவத்தில் காயத் துவங்கியுள்ளது.
அதனை தொடர்ந்து சேத்தியாத்தோப்பு வெள்ளாறு பாசனப்பிரிவு உதவி பொறியாளர் படைகாத்தான் தலைமையில் பணியாளர்கள் ரமேஷ், கமலக்கண்ணன், லட்சுமணன், செந்தில், மூர்த்தி ஆகியோர் ஏ.டி.சி., மதகு ஷட்டர்களை திறந்து பாசத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தனர்.
அந்த தண்ணீர் வெள்ளாறுராஜன் வாய்க்காலில் விட்டு அங்கிருந்து பாசன மதகு களான அரிய கோஷ்டி, மானம்பார்த்தான், பழைய முரட்டு வாய்க்கால் ஆகியன மூலம் பாசனத்திற்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

