ADDED : மே 28, 2026 06:45 AM

அ நிறம் | அளவு
பெண்ணாடம்: பராமரிப்பின்றி பழுதான மேல்நிலை குடிநீர் தொட்டியை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கி ன்றனர். கொத்தட்டை செல்லும் சாலையோரம் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செ ய்யப்படுகிறது.
நாளடைவில் போதிய பராமரிப்பின்றி உள்ள குடிநீர் தொட்டியின் பில்லர் மற்றும் பல இடங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் முழுஅளவு தண்ணீர் தேக்கி வைக்க அச்சம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இறையூரில் பழுதான மேல்நிலை குடிநீர் தொட்டியை புனரமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
