/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
நடுவீரப்பட்டில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 04, 2024 04:00 AM
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் கைத்தறி நெசவு மற்றும் பாவுபட்டறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பழனிவேல், மாவட்ட இணை செயலாளர் ராஜேஷ்கண்ணன், துணைத் தலைவர் ஆளவந்தார், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தவும், 2 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும், பென்ஷன் தொகையை ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் நெசவாளர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில் விவசாயதொழிலாள் சங்க ஒன்றிய தலைவர் வைத்திலிங்கம், வேலாயுதம்,அரங்கநாதன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.