ADDED : ஜன 29, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், தேவனாம்பட்டினம் குணசேகரன் மகன் கலைச்செல்வன் 20; அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ், இளஞ்செழியன். நண்பர்களான இவர்கள், நேற்று முன்தினம் மாலை தேவனாம்பட்டினம் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது கலைச்செல்வம் மற்றும் தினேஷ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தினேஷ், கலைச்செல்வனை திட்டியதால், அவர், மன உளைச்சலில் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து, தினேஷ், இளஞ்செழியன் இருவரும் கலைச்செல்வன் வீட்டிற்கு சென்று, அவரை மீண்டும் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
கலைச்செல்வன் புகாரின் பேரில் கடலுார் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.