தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இளைஞர்களுக்கு வலைவீசும் தி.மு.க., டிஜிட்டல் தளங்களில் கட்சிப் பதிவுகள்

இளைஞர்களுக்கு வலைவீசும் தி.மு.க., டிஜிட்டல் தளங்களில் கட்சிப் பதிவுகள்

இளைஞர்களுக்கு வலைவீசும் தி.மு.க., டிஜிட்டல் தளங்களில் கட்சிப் பதிவுகள்


ADDED : செப் 01, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வி கண்ட தி.மு.க., தலைமை, கட்சி கட்டமைப்பை பலப்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனையொட்டி, தற்போது தொடங்கியுள்ள உட்கட்சி தேர்தலில், இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்கப்படும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

த.வெ,க., வுக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் கிடைத்து வரும் ஆதரவு தி.மு.க.,வுக்கு சவாலாக மாறியுள்ளது. 2026 சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, இளம் தலை முறையினரைக் கவர்ந்துள்ள த.வெ.க.,வை வீழ்த்திடவும், இளம் வாக்காளர்களைக் கவரவும் தி.மு.க.வில் இளைஞர்களுக்கு  அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.

தி.மு.க., கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில், அடிமட்டத் தொண்டர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை புதிய இளைஞர்களைக் கொண்டு வர அதிரடி வயது வரம்புகளும், பதவி கால வரம்புகளும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தி.மு.க.,வில் வெறும் வாரிசு அரசியலாக இல்லாமல் அடிமட்டத் தொண்டர்களின் குடும்பத்தைச் சேர்ந்த புதிய இளைஞர்களையும், படித்த இளைஞர்களையும் முக்கிய கட்சிப் பதவிகளுக்கு கொண்டுவர கட்சி தலைமை புதிய விதிமுறைகள் வகுத்துள்ளது.

இளைஞர்கள் பலருக்கு கட்சியில் முக்கிய பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளதால் சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மூலம் இளைஞர்கள் பலர் பல்வேறு கல்வி, வேலைவாய்ப்பு, தி.மு.க., கட்சி தொடர்பான பதிவுகளை எளிய முறையில் பதிவிட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us