ADDED : ஏப் 01, 2026 03:49 PM

அ நிறம் | அளவு
புவனகிரி: கீரப்பாளையம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கீரப்பாளையம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தினசரி சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
தியாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. முன்னதாக, வெள்ளாற்றங்கரையில் இருந்து கரகம், காவடி புறப்பாடு துவங்கி கோவிலை வந்தடைந்தது.
