ADDED : மார் 14, 2026 04:44 AM
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் ரெட்டியார் ரோட்டில் நவீன வசதிகளுடன் கூடிய, வசந்தம் ஏ.சி., மஹால் எனும் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது.
நிறுவன இயக்குனர் ஹரிஹரன் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். உரிமையாளர் டாக்டர் சாந்தலட்சுமி ஹரிகரன் வரவேற்றார்.
புதிதாக திறக்கப்பட்ட திருமண மண்டபம் குளிர்சாதன வசதியுடன், அமைக்கப்பட்டுள்ளது. அதில், 15க்கு மேற்பட்ட தனி அறை , கார் பார்க்கிங், அனைத்து மதத்தினரும் பயன்டுத்தும் வகையில், தனித்தனி வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 500 பேர் உணவு அருந்தக் கூடிய வசதி உள்ளது.
விழாவில் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வசந்தம் ஏ.சி., மஹாலின் நிர்வாக இயக்குனர்கள் சர்வேஷ், விஸ்வேஷ் ஆகியோர் நன்றி கூறினர்.
