ADDED : ஏப் 20, 2026 06:41 PM

அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதிக்குட்பட்ட மருங்கூர் ஊராட்சி, கீரமங்களம் ஊராட்சி, காவணுார் ஊராட்சி, கீரமங்களம் ஊராட்சி, பவழங்குடி ஊராட்சி, பாலாஜி நகர் உட்பட, 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்று தி.மு.க., வேட்பாளர் சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வேனில் சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, தேவங்குடி ஊராட்சியில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். அவருடன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், வி.சி.க., மாவட்டசெயலாளர் அரங்க தமிழ்ஒளி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
