ADDED : ஜூன் 06, 2026 09:16 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில், புதிய சேர்க்கை மாணவர்கள் மற்றும் விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பும் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கல்வி குழும நிறுவனர் வீனஸ் குமார் பங்கேற்று மாணவர்களுக்கு மாலை அணிவித்து, வரவேற்று இனிப்புகள் வழங்கினார். மேலும் புதிய கல்வியாண்டில், இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மழலையர் மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி இயக்குநர் அருண், பள்ளி தலைவர் லியோனா, தாளாளர் ரூபியால் ராணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
