ADDED : ஜூலை 28, 2025 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மந்தாரக்குப்பம் கடை வீதியில் நடந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரமவுலி முன்னிலை வகித்தார். பொருளாளர் அருள்மணி வரவேற்றார்.
திட்ட இயக்குநர் சிவசங்கர், வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கி பேசினார். சங்க நிர்வாகிகள் பாலாஜி, பவுல்ராஜ், மூர்த்தி, கார்த்திகேயன், ஹரிபிரசாத், ராஜேஷ், பெரியகருப்பன் பங்கேற்றனர்.

