/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெலிங்டன் நீர்த்தேக்க மதகு ஷட்டர் பாகங்கள் திருட்டு
/
வெலிங்டன் நீர்த்தேக்க மதகு ஷட்டர் பாகங்கள் திருட்டு
வெலிங்டன் நீர்த்தேக்க மதகு ஷட்டர் பாகங்கள் திருட்டு
வெலிங்டன் நீர்த்தேக்க மதகு ஷட்டர் பாகங்கள் திருட்டு
ADDED : நவ 18, 2025 06:39 AM
திட்டக்குடி: திட்டக்குடி அருகே வெலிங்டன் நீர்த் தேக்க மதகின் ஷட்டர் பாகங்கள் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் துார் வாருதல், கரைகள் பலப்படுத்துதல், பாசன வாய்க்கால் துார் வாருதல், மதகுகளின் ஷட்டர்கள் சீரமைப்பு உள்ளிட்ட புனரமைப்பு பணிகளை கடந்த 2 நாட்களுக்கு முன் அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக, 30 கண் உள்ள மதகுகள் அகற்றும் பணி துவங்கியது. இதற்காக, மதகுகளின் ஷட்டர் ஹெட் செட்டுகளை (திறவுகோல்) அப்பகுதியில் வைத்திருந்தனர்.
நேற்று காலை 10:00 மணியளவில் வழக்கம்போல், அதிகாரிகள், பணியாளர்கள் வந்து பார்த்தபோது 30 ஷட்டர்களின் ஹெட் செட்டுகள் திருடுபோனது தெரிந்தது. தகவலறிந்த திட்டக்குடி போலீசார் சம்பவம் இடத்தில் விசாரித்தனர்.
இது குறித்து, வெலிங்டன் நீர்த்தேக்கம், நீர்வளத்துறை உதவி பொறியாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

