/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டரங்கில் 'சிந்தடிக்' ஓடுதளம் அமைப்பது...எப்போது? வீரர், வீராங்கனையர் அரசுக்கு கோரிக்கை
/
விளையாட்டரங்கில் 'சிந்தடிக்' ஓடுதளம் அமைப்பது...எப்போது? வீரர், வீராங்கனையர் அரசுக்கு கோரிக்கை
விளையாட்டரங்கில் 'சிந்தடிக்' ஓடுதளம் அமைப்பது...எப்போது? வீரர், வீராங்கனையர் அரசுக்கு கோரிக்கை
விளையாட்டரங்கில் 'சிந்தடிக்' ஓடுதளம் அமைப்பது...எப்போது? வீரர், வீராங்கனையர் அரசுக்கு கோரிக்கை
ADDED : டிச 05, 2025 05:10 AM

கடலுார்: அண்ணா விளையாட்டரங்கில், 15 கோடி ரூபாய் மதிப்பில் 'சிந்தடிக்'ஓடுதளம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கடலுார், அண்ணா விளையாட்டரங்கம் மாநகரின் மையத்தில் அமைந்துள்ளது. இந் த அரங்க வளாகத்தினுள், தடகளம், வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, குத்துசண்டை, நீச்சல், யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை இந்த மைதானத்தில் பெற முடியும்.
பெரிய அளவிலான போட்டிகள் நடக்கும்போது பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு வசதியாக 'கேலரி' அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 'கேலரி'க்கு எதிரே தற்போது வெறும் மணல் டிராக்காக உள்ளது. மேலும் அண்ணா விளையாட்டரங்கில் மழைநீர் வடிய வாய்ப்பில்லை. இதனால் எப்போது மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி பெரிய ஏரி போல் காட்சி அளிக்கிறது. இதனால் மழைநீர் வடியும் வரை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இங்கு பயிற்சி பெற முடியாமல் பாதிப் பி ற்குள்ளாகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து, கருணாநிதி நுாற்றாண்டு விழாவிற்கு, கடலுார் வருகை தந்த துணை முதல்வர் உதயநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அவர், 15 கோடி ரூபாய் மதிப்பில் அண்ணா விளையாட்டு மைதானத்தில், 'சிந்தடிக்' ஓடுதளம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து அண்ணா விளையாட்டு அரங்கில் மறுநாளே அளவிடும் பணி துவங்கியது.
இதற்காக ஒட்டுமொத்த மைதானத்தையும் அளவீடு செய்து, மைதானத்தில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் அமைப்பது குறித்தும், 'சிந்தடிக்' ஓடுதளம் அமைப்பது குறித்தும் முதற்கட்ட அறிக்கையை அதிகாரிகள் தயார் செய்து முன்மொழிவுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் மூலமாக அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், கடந்த 10 மாதங்களை கடந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் உள்ளது. முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு முன்னதாக, 'சிந்தடிக்' ஓடுதளம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, விளையாட்டு வீரர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை .
இதுவரை நிதி ஒதுக்கீடு பெறாத காரணத்தால் எப்போது கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் விளையாட்டு வீரர்கள் காத்திருக்கின்றனர்.

