/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுண்ணறிவு பிரிவு போலீசார் 'குறட்றை' விழித்து கொள்வது எப்போது
/
நுண்ணறிவு பிரிவு போலீசார் 'குறட்றை' விழித்து கொள்வது எப்போது
நுண்ணறிவு பிரிவு போலீசார் 'குறட்றை' விழித்து கொள்வது எப்போது
நுண்ணறிவு பிரிவு போலீசார் 'குறட்றை' விழித்து கொள்வது எப்போது
ADDED : ஜூன் 18, 2025 05:04 AM
காட்டுமன்னார்கோவில் அடுத்த கோவில்பத்து, மணலியை சேர்ந்த பிரவீன்ராஜ் என்ற வாலிபரை 10 பேர் கொண்ட கும்பல், கடந்த 11ம் தேதி வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்தது. இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த 6 ம் படுகொலை செய்யப்பட்ட பிரவீன்ராஜ், பைக்கில் சென்றபோது, அதேபகுதியைச் சேர்ந்த சிவராஜ், சக்திவேல் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, பிரவீன்ராஜ் தான் வைத்திருந்த பேனா கத்தியால், இருவரையும் கிழித்துள்ளார். இதுசம்பந்தமாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதில், ஆத்திரமடைந்த சிவராஜ் தரப்பினர், கடந்த 11ம் தேதி பிரவீன்ராஜை வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதுசம்பந்தமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத, இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க, திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனை முன்கூட்டியே உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்காமல், மெத்தனமாக இருந்துள்ளார் அப்பகுதியில் பணியாற்றும் குற்ற நுண்ணறிவு போலீசார். இந்த சம்பவம் குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே, அறிக்கை அனுப்பி இருந்தால், போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பர். கொலை சம்பவத்தை தடுத்திருக்கலாம்.