ADDED : ஜன 03, 2026 04:52 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த மலையடிக்குப்பத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடை கட்டத்தினை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் ஊராட்சி,மலையடிக்குப்பம் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிட ரேஷன் கடை கட்டடம் இல்லை. இதனால் அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக புத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான சிறிய இடத்தில் தற்காலிமாக ரேஷன்கடையை நடத்தி வருகின்றனர்.
இந்த இடம் போதிய இடவசதி இல்லாததால்,கடந்த 2021-2022 ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்த ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் போது இட நெருக்கடியில் அவதியடைந்து வருகின்றனர். ஆகையால் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள புதிய ரேஷன் கடை கட்டடத்தினை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

