/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எப்போது இடிந்து விழுமோ டிராபிக் போலீசார் திக்...திக்...
/
எப்போது இடிந்து விழுமோ டிராபிக் போலீசார் திக்...திக்...
எப்போது இடிந்து விழுமோ டிராபிக் போலீசார் திக்...திக்...
எப்போது இடிந்து விழுமோ டிராபிக் போலீசார் திக்...திக்...
ADDED : ஜன 28, 2026 07:16 AM

வி ருத்தாசலம் கடைவீதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் ஸ்டேஷன் இயங்கிய பழமையான கட்டடத்தில், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஊர்க்காவல் படை அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு ஒரு இன்ஸ்பெக்டர், 3 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் பணிபுரிகின்றனர். இந்த கட்டடத்தில், ஓடுகள் போடப்பட்ட மேற்கூரை பல ஆண்டுகளாக சீரமைக்கப் படாமல் ஆங்காங்கே விரிசல் விழுந்து காணப்படுகிறது.
இதனால் மழை காலங்களில் தண்ணீர் முழுவதுமாக வழிந்து, கோப்புகள், தளவாடப் பொருட்களை நாசம் செய்கிறது. மேலும் போலீசாரின் உடமைகள், சீருடைகளும் சேதமாகிறது.
இது குறித்து பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கப்படவில்லை.
பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்போது ஓடுகள் பெயர்ந்து, உள்ளே விழுவதால் அச்சத்துடன் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனை சீரமைத்து, போலீசார் பாதுகாப்பாக பணிபுரிய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

