/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'எப்பத்தான் வீடு தருவீங்க...' விரக்தியில் கிராம மக்கள்
/
'எப்பத்தான் வீடு தருவீங்க...' விரக்தியில் கிராம மக்கள்
'எப்பத்தான் வீடு தருவீங்க...' விரக்தியில் கிராம மக்கள்
'எப்பத்தான் வீடு தருவீங்க...' விரக்தியில் கிராம மக்கள்
ADDED : அக் 16, 2024 06:49 AM
நெய்வேலி சுரங்க விரிவாக்கப் பணிக்காக கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலம் மற்றும் வீடுகளை என்.எல்.சி., நிர்வாகம் கையகப்படுத்தியது.
இதற்கு மாற்று இடமாக, ஆலடி பாலக்கொல்லை கல்லாங்குத்து கிராமத்தில் அனைவருக்கும் வீட்டுமனை இடம் வழங்கப்பட்டது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் வீடுகள் கட்டும் பணி துவங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில், வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை.
வீடுகளை ஒப்படைக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தாரர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கலெக்டர், ஆர்.டி.ஒ., மற்றும் வருவாய் துறை அலுவலத்திற்கு, பயனாளிகள் நடையாய் நடந்தும் இதுவரையில் வீடு கிடைக்கவில்லை.
அதிகாரிகள் தரப்பில், நீங்கள் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம், வீடுகள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் வழக்கமாகன பதிலையே கூறி வருவதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், 'எப்பத்தான் வீடு கிடைக்குமோ' என, பாதிக்கப்பட்ட கிராம மக்கள் விரக்தியில் புலம்பி வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் பாலக்கொல்லை மாற்று குடியிருப்பு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.