/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்., வி.சி., ஆர்வம் திட்டக்குடியில் களம் இறங்கப்போவது யார்?
/
காங்., வி.சி., ஆர்வம் திட்டக்குடியில் களம் இறங்கப்போவது யார்?
காங்., வி.சி., ஆர்வம் திட்டக்குடியில் களம் இறங்கப்போவது யார்?
காங்., வி.சி., ஆர்வம் திட்டக்குடியில் களம் இறங்கப்போவது யார்?
ADDED : நவ 19, 2025 08:22 AM
தமிழகத்தில் ஆளும் கட்சியின் பதவிக்காலம் வரும் 2026, மே மாதத்தில் முடிகிறது.
இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தங்களின் கூட்டணி கட்சிகளை மாற்றுக்கட்சிகளுக்கு செல்லவிடாமல் தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி, ஆளும் கட்சியான தி.மு.க., தங்களின் கூட்டணி கட்சிகள் கேட்கும் சட்டசபை தொகுதிகளை கொடுக்குமா, கொடுக்காதா என தெரியவில்லை.
ஆனால், தி.மு.க.,வின் சில கூட்டணி கட்சிகள் எப்படியாவது தங்கள் விரும்பிய சட்டசபை தொகுதிகளை கேட்டு வாங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பாக, கூட்டணி கட்சியினர் அவரவர் கட்சி தலைமைக்கு அழுத்தம் தர துவங்கி உள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் உள்ள தேசிய கட்சியான காங்., தலைமை பொறுப்பில் உள்ளவரும், உள்ளூரில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலரும் தங்களுக்கு 'சீட்' வழங்க வேண்டும் என தங்களின் கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து, தி.மு.க., தலைமையிடம் பேசுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தற்போது ஆளும் கட்சியில் உள்ள மற்றொரு கூட்டணி கட்சியான வி.சி., கட்சியினர், தற்போது ஒரு சிலரை சமூக வலைதளங்களில் அடையாளப்படுத்தி எங்களுக்கும் திட்டக்குடி (தனி) தொகுதி வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.
இதனால்டென்ஷன் ஆகி உள்ள 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான கணேசன், தொகுதியை எப்படியாவது தன் வசமாக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார்.
இதனால் மாவட்டத்தின் கடைகோடி தொகுதியான திட்டக்குடியில், தி.மு.க., போட்டியிடுமா அல்லது, கூட்டணியில் உள்ள கட்சிக்கு ஒதுக்குமா என தெரியவில்லை. எந்த கட்சியினரின் கனவு பலிக்கும் என போகப்போகத்தான் தெரியும். என கட்சியினர் குழம்பி வருகின்றனர்.

