திட்டக்குடி யாருக்கு? அ.தி.மு.க.,வில் திக்.. திக்..
திட்டக்குடி யாருக்கு? அ.தி.மு.க.,வில் திக்.. திக்..
ADDED : பிப் 18, 2026 04:04 AM
அ நிறம் | அளவு
த மிழகத்தில் ஆளும் கட்சியின் பதவிக்காலம் வரும் 2026, மே மாதம் 9ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி முனைப்பு காட்டி வருகிறது.
அதன்படி, திட்டக் குடி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., வினர் 30க்கும் மேற்பட்டோர் கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளனர். ஆனால், யாருக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது என இதுவரை எதுவும் தெரியவில்லை. இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் திட்டக்குடி தொகுதி யாருக்கு 'சீட்' கிடைக்கும் என விருப்ப மனு கொடுத்தவர்கள் தங்களுக்கு கிடைக்குமா... கிடைக்காதா என பக்... பக்... மனநிலையில் உள்ளனர்.
