/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூழாங்கற்கள் கடத்தல் விவகாரம் அதிகாரிகள் தயக்கம் ஏன்?
/
கூழாங்கற்கள் கடத்தல் விவகாரம் அதிகாரிகள் தயக்கம் ஏன்?
கூழாங்கற்கள் கடத்தல் விவகாரம் அதிகாரிகள் தயக்கம் ஏன்?
கூழாங்கற்கள் கடத்தல் விவகாரம் அதிகாரிகள் தயக்கம் ஏன்?
ADDED : பிப் 05, 2025 06:27 AM
விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தில் ஓடை புறம்போக்கு மற்றும் தனிநபர் நிலங்களில் விதிமீறலாக கூழாங்கள் கடத்தப்படுகிறது. சமீபத்தில் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் மண்ணை சலித்து, கூழாங்கற்கள் பிரித்து எடுக்கப்படும் புகைப்படங்கள் வைரலானது.
இதனைச்சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், தாசில்தார் உதயகுமார் தலைமையிலான அலுவலர்கள் சென்று, 6 யூனிட் கூழாங்கற்களை பறிமுதல் செய்தனர்.
இருப்பினும் 5 நாட்களாகியும் நிலத்தின் உரிமையாளர் மற்றும் கூழாங்கற்களை கடத்த முயன்ற நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கனிம வளங்களை கடத்தும் நபர்கள் மீது அந்த பொருளின் விலைக்கு 15 மடங்கு வரை அபராதம் விதிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கூழாங்கற்கள் கடத்திய நபர்கள் மீது இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு பின்னால் ஆளுங்கட்சி பிரமுகர்கள் இருப்பதாகவும், அதனால் கால தாமதம் ஏற்படுகிறது என வருவாய்த்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதே சமயத்தில், சமூக வலைதளங்கில் படங்களை வைரலாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என, பலரும் கமாண்ட் அடிக்கின்றனர்.