/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் பரவலாக மழை காட்டுமயிலுாரில் 100 மி.மீ., பதிவு
/
மாவட்டத்தில் பரவலாக மழை காட்டுமயிலுாரில் 100 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் பரவலாக மழை காட்டுமயிலுாரில் 100 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் பரவலாக மழை காட்டுமயிலுாரில் 100 மி.மீ., பதிவு
ADDED : ஆக 10, 2025 02:34 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் அதிகபட்சமாக காட்டுமயிலுாரில் 100 மி.மீ., மழை பெய்தது.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலுார் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில், கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை 8:00 மணி முதல் நேற்று காலை 8:00 மணி வரை பெய்த மழையளவு வருமாறு:
காட்டுமயிலுார் 100 மி.மீ., வேப்பூர் 87, மேமாத்துார் 86, குப்பநத்தம் 64.7, குறிஞ்சிப்பாடி 56, ஸ்ரீமுஷ்ணம் 55.2, விருத்தாசலம் 50, கீழ்ச்செருவாய் 46.8, வடக்குத்து 44, புவனகிரி 40, பரங்கிப்பேட்டை 36.3, சேத்தியாத்தோப்பு 36.2, கொத்தவாச்சேரி 35, லக்கூர் 30.2, பண்ருட்டி 30, பெலாந்துறை 26.4, காட்டுமன்னார்கோவில் 21.3, லால்பேட்டை 20, தொழுதுார்13, கடலுார் 11.8, கலெக்டர் அலுவலகம் 11, அண்ணாமலை நகர் 9, சிதம்பரம் 8.2, வானமாதேவி 5, எஸ்.ஆர்.சி.,குடிதாங்கி 3 மி.மீ, மழை பெய்துள்ளது.இதில் அதிகபட்சமாக காட்டுமயிலுாரில் 100 மி.மீ., மழை பதிவானது.