ADDED : ஜன 15, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மனைவி, குழந்தையை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
பரங்கிப்பேட்டை அடுத்த வி.பஞ்சங்குப்பத்தை சேர்ந்தவர் தவமணி, 34; இவரது மனைவி நவீனா, 24; மகள் நிவர்த்திகா, 5; அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில், நவீனா தனது மகளுடன் மூன்று மாதமாக தங்கியிருநதார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி குழந்தையுடன் வெளியே சென்ற நவீனாவை காணவில்லை.
இதுகுறித்து, தவமணி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.