தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனைவி தற்கொலை கணவர் கைது

 மனைவி தற்கொலை கணவர் கைது

 மனைவி தற்கொலை கணவர் கைது


ADDED : ஜூலை 02, 2026 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மனைவியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், கணவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த விழுதுடையான் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி மகள் தமிழரசி, 22; இவருக்கும் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கீரமங்கலம் ஞானகுரு என்பவருக்கும் கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது.

தமிழரசி தனது சகோதரர் தமிழ்ச்செல்வனுடன், கார்மாங்குடியில் உள்ள செங்கல் சூளையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த பிப்., 28ம் தேதி சூளைக்கு சென்ற ஞானகுரு, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் அங்கிருந்து புறப்பட்டதும் மனமுடைந்த தமிழரசி, துாக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது, அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தமிழரசி சகோதரர் தமிழ்ச்செல்வன் புகாரின் பேரில், விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தார். ஆர்.டி.ஓ., விசாரணை முடிந்த நிலையில், மனைவியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், அவரது கணவர் வீராசாமி மகன் ஞானகுருவை, 32, போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us