ADDED : மார் 13, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கணவர் புகாரின் பேரில், மாயமான மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் சக்தி நகரை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜேஷ்கண்ணன், 36; டிரைவர். இவரது மனைவி நிவேதா, 30; தம்பதிக்கு, 5 வயதில் மகன் உள்ளார்.
கடந்த 8ம் தேதி ராஜேஷ்கண்ணன் கன்னியாகுமரி சென்றிருந்தபோது, மகனை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு நிவேதா மாயமானார். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
ராஜேஷ்கண்ணன் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
