ADDED : மார் 29, 2026 10:34 PM
அ நிறம் | அளவு
வடலுார்: மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்தார்
வடலுார், என்.எல்.சி ஆபிஸர் நகர், கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா, 40 ; அதே பகுதியில்,பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவுசல்யா, நேற்று முன்தினம் அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து இளையராஜா புகார் அளித்தார். வடலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
