ADDED : ஆக 25, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கணவர் புகாரின் பேரில், மாயமான மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ராஜசேகர், 40. இவரது மனைவி மதுபாலா, 28. இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜசேகர் கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்த நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி காலை 11:00 மணியளவில், கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற மதுபாலா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ராஜசேகர் புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மதுபாலாவை தேடி வருகின்றனர்.
