ADDED : செப் 13, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். பண்ருட்டி அடுத்த எல்.என். புரத்தை சேர்ந்தவர் பிரதாப், 31; தொழிலாளி. இவருக்கும் ஆர்.எஸ்.மணி நகர் சேர்ந்த மோகன் மகள் சினேகா,21; க்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி திருமணம் நடந்தது .
இந்நிலையில் கடந்த 11 ம்தேதி மாலை 5:30 மணியளவில் வீட்டில் இருந்த சினேகாவை காணவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
சினேகாவை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் பிரதாப்,31; புகார் கொடுத்தனர்.இதன் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
