/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேப்பூரில் அமைக்கப்படுமா?
/
பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேப்பூரில் அமைக்கப்படுமா?
பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேப்பூரில் அமைக்கப்படுமா?
பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேப்பூரில் அமைக்கப்படுமா?
ADDED : அக் 25, 2024 06:31 AM
வேப்பூர்: வேப்பூரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேப்பூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்னை சர்வீஸ் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, கடந்த 1966ல் உயர் நிலைப் பள்ளியாக துவக்கப்பட்டு, 1989ல் மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இங்கு, வேப்பூர் மற்றும் அதன் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் 1,500க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.
பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக மாணவிகளின் எண்ணிக்கையும் உள்ளது.
வேப்பூரில் பெண்கள் மேல் நிலைப்பள்ளி இல்லாததால், 15 கி.மீ., துார முள்ள நல்லுார் பெண்கள் பள்ளியில் சேர்க்கின்றனர். இதனால், தினசரி மாணவி கள் வெகுதுாரம் பயணித்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாணவிகளின் சிரமத்தை தடுக்க வேப்பூரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

