ADDED : பிப் 27, 2026 04:53 AM
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள கெங்கை கொண்டான் பேரூராட்சி, பழைய நெய்வேலி, பெரியாக்குறிச்சி, மேல்பாதி, கீழ் பாதி, சேப்ளா நத்தம், வடக்கு வெள்ளுர் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமனோர் வசித்து வருகின்றனர்.
இங்கு என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம், நிர்வாக அலுவலகம், பள்ளிகள், மார்க்கெட், வங்கிகள் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் நவீன வசதிகளுடன் விளையாட்டு பூங்கா இல்லாததால் ஒய்வு பெற்ற தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.
என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப்பணிக்காக மந்தாரக்குப்பம் அதை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டுள்ளன.
அதனால், இப்பகுதியில் என்.எல்.சி., சி.எஸ்.ஆர்., நிதியில் நவீன வசதிகளுடன் விளையாட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
