தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விவசாய அடையாள எண் வழங்கப்படுமா?

 விவசாய அடையாள எண் வழங்கப்படுமா?

 விவசாய அடையாள எண் வழங்கப்படுமா?


ADDED : பிப் 25, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: விவசாயிகளுக்கு தனித்துவ விவசாய அடையாள எண் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய அரசின் பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இந்த தொகை மூன்று தவணையாக தலா 2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமே பதிவு செய்ய முடியும். இதுவரை இந்த நிதியை பெற்று வந்த நகர பகுதி விவசாயிகளுக்கு இனி நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கூறியதாவது; நெல்லிக்குப்பம் நகராட்சியில் சோழவல்லி, வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, மேல்பாதி, கீழ்பாதி, திருக்கண்டேஸ்வரம், விஸ்வநாதபுரம் என பல கிராம பகுதிகள் உள்ளன. இவை கிராம பகுதிகளாக இருந்தாலும் நிர்வாக வசதிக்காக நகராட்சியில் இணைத்துள்ளனர்.

மத்திய அரசின் தனித்துவ விவசாய அடையாள எண் இருந்தால் மட்டுமே மத்திய அரசின் நிதி கிடைக்கும் என கலெக்டர் கூறியுள்ளார். நகர பகுதி விவசாயிகளுக்கு இதுவரை தனித்துவ விவசாய அடையாள எண் வழங்கவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்திய அரசின் மான்ய தொகையை பெற முடியுமா என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us